UPDATED : ஆக 09, 2025 05:25 PM
ADDED : ஆக 09, 2025 05:22 PM

புதுடில்லி: டில்லியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பிரம்ம குமாரிகளுடன் பிரதமர் மோடி ரக்ஷா பந்தனை கொண்டாடி மகிழ்ந்தார்.
ஆண்டுதோறும் ஆக.,9ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதர உறவை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையொட்டி, ஒவ்வொரு பெண்களும் தனது சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி விடுவது வழக்கம்.
அந்த வகையில், பிரதமர் அலுவலகத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் பள்ளிக் குழந்தைகள், பிரம்ம குமாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கட்டி விட்டு மகிழ்ந்தனர்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி,'எங்களின் பெண்கள் சக்தியின் அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் என்றும் நன்றி கூறுவோம்,' என்று குறிப்பிட்டிருந்தார்.