பிரதமர் மோடி தான் என் குரு முதல்வர் ரேகா குப்தா வாழ்த்து
பிரதமர் மோடி தான் என் குரு முதல்வர் ரேகா குப்தா வாழ்த்து
ADDED : ஜூலை 10, 2025 10:30 PM
புதுடில்லி,:''பிரதமர் மோடியை என் குருவாக கருதுகிறேன். அவரின் கடின உழைப்புக்கு அடிபணிகிறேன். அவரை வாழ்த்துகிறேன்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
குரு பூர்ணிமா எனும் ஹிந்துக்களின் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு டில்லியில் உள்ள அத்சினி கிராமத்தில், டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடந்த ஆரம்ப புஸ்தகாலயா என்ற நிகழ்ச்சியை, துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுடன் முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்.
பின், ரேகா குப்தா கூறியதாவது:
இன்று, குரு பூர்ணிமா நாள். பிரதமர் மோடியை நான் நினைவுகூர்கிறேன். அவரை என் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை எட்டு நாட்களில் நிறைவு செய்து, பல விருதுகளை பெற்றுள்ள அவரை நான் பாராட்டுகிறேன்.
எல்லாவற்றிலும் நாடு தான் முக்கியம் என்பதை உணர்த்திய அவரால், இந்த நாட்டுக்கும், உலகத்திற்கும் பெருமை. கடினமாக உழைக்க வேண்டும் என்பதை அவரின் செயல்பாடு உணர்த்துகிறது. அவரை வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.