பிரதமர் மோடி இன்று 3 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம்
பிரதமர் மோடி இன்று 3 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம்
ADDED : நவ 16, 2024 02:41 AM

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று ( நவ. 16) நைஜிரியா, பிரேசில் கினியா ஆகிய மூன்று நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இது தொடர்பாக நேற்று (நவ. 15) மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்தரி இரவு வெளியிட்ட செய்தி நைஜிரியா அதிபர் போலா அகமத் டினுபு அழைப்பின் பேரில் நவ. 16,17 தேதிகளில் நைஜிரியா. செல்கிறார் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் நைஜிரியா செல்வவது குறி்ப்பிடத்தக்கது. பின் நவ. 17-ல் கினியா சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். நவ. 18,19 ஆகிய இரு தேதிகளில் பிரேசிலில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்று ஜி20 மாநாட்டின் தலைவர்களை சந்திக்கிறார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.