குஜராத்தில் ரூ.284 கோடி நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
குஜராத்தில் ரூ.284 கோடி நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
ADDED : அக் 30, 2024 09:56 PM

நர்மதா: குஜராத்தில் ரூ.284 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
2 நாள் பயணமாக, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான, நாளை (அக்.,31) தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.
அகமதாபாத்தில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள ஏக்தா நகரில் ஸ்மார்ட் பஸ் ஸ்டாப்கள், ரூ.23.26 கோடியிலான சோலார் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.22 கோடி செலவில், 50 படுக்கைககளுடன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த பயணத்தின் போது, ரூ.75 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அதேபோல, தீயணைப்பு துறையினருக்கான குடியிருப்புகள், போன்சாய் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.