டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு
டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு
UPDATED : ஆக 03, 2025 06:55 PM
ADDED : ஆக 03, 2025 01:39 PM

புதுடில்லி: டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.
டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியை சந்தித்து மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து, சுதந்திர தின விழா கொண்டாட்டம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஜனாதிபதியுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.