பிரதமர் மோடி பேச்சுக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எட்டு மொழியில் மொழி பெயர்ப்பு
பிரதமர் மோடி பேச்சுக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எட்டு மொழியில் மொழி பெயர்ப்பு
UPDATED : மார் 05, 2024 07:21 PM
ADDED : மார் 05, 2024 07:17 PM

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக பிரதமர் மோடியின் பேச்சு8 மொழிகளில் மொழி பெயர்த்து பேசும் வகையில் ‛ எக்ஸ்' வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் பிரதர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் நடந்த பொது கூட்டத்தில் ஹிந்தியில் பேசியதை ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்த்து பதிவேற்றப்பட்டது. பின்னர் காசி தமிழ்சங்கத்தின் மோடி ஹிந்தி பேச்சும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இது மக்களை அணுகுவது எளிதாக உள்ளதாகவும், இது ஒரு புதிய ஆரம்பம் என மோடி கூறினார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் பேச்சு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, வங்காளம், ஒடியா. பஞ்சாபி ஆகிய எட்டு மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் வாயிலாக மொழி பெயர்க்கப்பட்டு எட்டு ‛எக்ஸ்' வலைதள கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

