ADDED : மார் 18, 2024 06:19 AM

ஷிவமொகா,  :  பிரதமர் மோடி இன்று ஷிவமொகா வருகை தருகிறார். பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
ஷிவமொகா பழைய சிறைச்சாலை திடலில் உள்ள, சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஷிவமொகா பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமார் நேற்று அளித்த பேட்டி:
பிரதமர் மோடி பங்கேற்கும், ஷிவமொகா கூட்டத்தில் 2.50 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கிறோம்.
கூட்ட மேடையில் ம.ஜ.த., தலைவர்களும் இருப்பர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, பா.ஜ., வேட்பாளர்கள் ஷிவமொகா ராகவேந்திரா, தாவணகெரே காயத்ரி சித்தேஸ்வர், உடுப்பி - சிக்கமகளூரு கோட்டா சீனிவாச பூஜாரி, தட்சிண கன்னடா பிரிஜேஷ் சவுடா கலந்து கொள்வர். கூட்டத்தில் பங்கேற்கும்படி ஈஸ்வரப்பாவுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

