ADDED : பிப் 10, 2024 06:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள இந்து கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரு நாள் பயணமான ஐக்கிய அமீரகம் செல்ல உள்ளார்.
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் ‛‛பாப்ஸ்'' என்ற அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இக் கோவில் வரும் 14ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் கோவில் நி்ர்வாகிகள் கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியை சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து வரும் 13,14 ஆகிய இரு தேதிகளில் ஐக்கிய அமீரக அரபு நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்கிறார்.