ADDED : அக் 07, 2024 11:57 PM
புதுடில்லி: நம் நாட்டில் நவராத்திரி பண்டிகை துவங்கி உள்ளது. இந்த பண்டிகையின் போது, குஜராத் மக்கள் 'கர்பா' என்ற பெயரில் நடனமாடுவர்.
இந்நிலையில், துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் வகையில், தான் எழுதிய கர்பா பாடலை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று பகிர்ந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு:
நவராத்திரி விழாவை மக்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர். அன்னை துர்கா தேவி சக்திக்கும், கருணைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக நான் எழுதிய, 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பா பாடலை கேளுங்கள். இந்த பாடலை பாடிய பாடகி பூர்வ மந்திரிக்கு நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
''பிரதமர் மோடி எழுதிய கர்பா பாடலை பாடியது மிகவும் பெருமிதமாக உள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்,'' என, பாடகி பூர்வ மந்திரி தெரிவித்து உள்ளார்.
