வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா 'வந்தே பாரத்' சேவையை துவக்கி வைத்து பிரதமர் பேச்சு
வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா 'வந்தே பாரத்' சேவையை துவக்கி வைத்து பிரதமர் பேச்சு
ADDED : நவ 08, 2025 11:28 PM

வாரணாசி: உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில், நான்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது,” என தெரிவித்தார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தன் சொந்த லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு, பிரதமர் மோடி நேற்று வந்தார்.
முக்கிய கலாசாரம் வாரணாசி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வாரணாசி - கஜுராஹோ; லக்னோ - சஹாரன்பூர்; பிரோஸ்பூர் - டில்லி; எர்ணாகுளம் - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை, கொடி அசைத்து அவர் துவக்கி வைத்தார்.
வா ரணாசி - -கஜுராஹோ வந்தே பாரத் ரயில் சேவை, வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட் போன்ற முக்கிய கலாசார மற்றும் மத இடங்களை இணைக்கும். நான்கு பு திய ரயில் சேவைகள் மூலம், நாட்டில் தற்போது பல்வேறு வழித்தடங்களில், 160க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
உலகின் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், அவற்றின் உட்கட்டமைப்பு தான்.
உட்கட்டமைப்பு என்பது வெறும் பாலங்கள் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும் மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்த வகையில் வளர்ச்சி பெறுவது தான் உ ட்கட்டமைப்பின் சிறப்பு.
அந்த வகையில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு வந்தே பாரத் ரயில்களும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் உதவுகின்றன.
ஆன்மிக சுற்றுலா வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற ரயில்கள் அடுத்த தலைமுறைக்கான ரயில்களாக உரு வெடுத்துள்ளன. பா.ஜ., அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 11 ஆண்டு களில், புதிய வளர்ச்சியை உ.பி., எட்டிஉள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து உ.பி.,க்கு ஆன்மிக சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால், அம்மாநில அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களும், நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும்; முக்கிய நகரங்களை இணைக்கும்; நேரத்தை கணிசமாக குறை க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரயில்வே போலீசாருடன்
பா.ஜ., - எம்.எல்.ஏ., மோதல்
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, வாரணாசி ரயில் நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சவுரப் ஸ்ரீவஸ்தவா, தன் ஆதரவாளர்களுடன், ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றார். அப்போது அவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை மட்டும் பாதுகாப்பு படையினர் ரயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர்.
தமிழகம் வழியே செல்லும்
எர்ணாகுளம் ரயில்!
கேரளாவின் எர்ணாகுளம் - கர்நாடகாவின் பெங்களூரு இடையே புதிதாக துவங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவை, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த சில நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. எட்டு பெட்டிகள் உடைய இந்த ரயிலில், 'ஏசி' பெட்டி இருக்கைக்கான கட்டணம், 1,615 ரூபாய்; 'எக்ஸிகியூட்டிவ்' இருக்கைக்கான கட்டணம், 2,980 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சூர் ஆகிய ஏழு ரயில் நிலையங்களில், எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். பெங்களூரில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1:50க்கு எர்ணாகுளம் வந்தடையும். மதியம் 2:20க்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 11:00க்கு பெங்களூரு சென்று சேரும்.

