லிங்காயத்துகளுக்கு முன்னுரிமை நட்டா , கார்கேவுக்கு சிவசங்கரப்பா கடிதம்
லிங்காயத்துகளுக்கு முன்னுரிமை நட்டா , கார்கேவுக்கு சிவசங்கரப்பா கடிதம்
ADDED : பிப் 14, 2024 04:40 AM

தாவணகெரே, : 'லோக்சபா, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட லிங்காயத் சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
கர்நாடகாவின் நான்கு ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கில், மூன்று காங்கிரசுக்கு கிடைக்கும்.
இதில், ஒரு இடத்தை வீரசைவ லிங்காயத் சமுதாயத்துக்கு வழங்க வேண்டும்.
இது போன்று, லோக்சபா தேர்தலில் போட்டியிட, எங்கள் சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வீரசைவ லிங்காயத் சமுதாயம், 1999 வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர். நிஜலிங்கப்பா, ஜத்தி, கண்டி, வீரேந்திர பாட்டீல் உட்பட பல தலைவர்கள் இருந்தனர்.
தேசிய, மாநில அரசியலில் எங்கள் சமுதாய தலைவர்கள் முக்கிய பதவிகளில் இருந்தனர். அதன்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், எங்களை அலட்சியப்படுத்தினர்.
இதனால், காங்கிரஸ் பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இப்போதும் காலம் கெட்டுப் போகவில்லை. தேசிய, மாநில அளவில் முன்னுரிமை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கும், சிவசங்கரப்பா எழுதியுள்ளார்.

