ADDED : ஜூலை 15, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:திஹார் சிறை மருத்துவமனை ஜன்னலில் துாக்கிட்டு விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.
திஹார் சிறை வளாகத்தின், 4வது எண் சிறையில், விசாரணைக் கைதி ரமேஷ் கர்மாகர் அடைக்கப்பட்டு இருந்தார். உடல் நலக்குறைவால் மே 28ம் தேதி சிறை எண் 3ல் உள்ள சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், 13ம் தேதி இரவு, ஜன்னலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

