ADDED : பிப் 22, 2024 01:45 AM
பிலிபித்,:உத்தர பிரதேசத்தில் சிறையில் அடைக்க-ப்பட்டு இருந்த கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உ.பி., மாநிலம் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுக்விந்தர்,23. பாலியல் குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில், 2016ம் ஆண்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2020ல் ஜாமினில் வந்த அவர், கடந்த 7ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு கழிப்பறைக்கு சென்ற சுக்விந்தர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கதவைத் தட்டியும் திறக்கவில்லை.
சிறை ஊழியர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு, வென்டிலேட்டரின் கிரில்லில் மப்ளரை மாட்டி அதில் துாக்கிட்டு சுக்விந்தர் தற்கொலை செய்திருந்தார்.
சிறை அதிகாரிகள் மற்றும் டாக்டர் குழுவினர் வந்து, ஆய்வு செய்தனர். சுக்விந்தர் உயிரிழந்து விட்டதை, டாக்டர் உறுதி செய்தார். இதுகுறித்து, விசாரணை நடக்கிறது.