தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி

குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி

குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி


ADDED : ஏப் 22, 2025 05:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 05:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்ரேலி: குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஒரு தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்ததில், விமானி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து துணை எஸ்.பி. சிராக் தேசாய் கூறியதாவது:

குஜராத்தில் உள்ள அம்ரேலியின் சாஸ்திரி நகர் குடியிருப்புப் பகுதியில் இன்று தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிரிழந்தார். விமானத்தை ஓட்டிச்சென்றது அனிகேத் மகாஜன் என்பது தெரியவந்துள்ளது.

தீயணைப்பு மற்றும் காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கின. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

குஜராத்தில் மார்ச் மாதம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகரில் மற்றொரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

இவ்வாறு சிராக் தேசாய் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us