பிரியங்காவால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி; சோனியா, கார்கே பெருமிதம்
பிரியங்காவால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி; சோனியா, கார்கே பெருமிதம்
ADDED : நவ 28, 2024 02:38 PM

புதுடில்லி: பிரியங்காவால் பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
வயநாடு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பிரியங்கா இன்று (நவ.,28) எம்.பி.,யாக பதவியேற்றார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: பிரியங்காவால் பார்லிமென்டில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது. எங்களுக்கு புதிய ஆற்றல் கிடைத்துள்ளது.
பிரியங்கா மக்கள் பிரச்னைகளை நன்கு புரிந்து கொண்டு, பார்லிமென்டில் கேள்வி எழுப்புவார். குறிப்பாக, அவர் பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார். இது எங்கள் கட்சிக்கும், பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சோனியா பதில்
மகள் பிரியங்கா முதல் முறையாக, எம்.பி.,யாக பதவியேற்றது குறித்து நிருபர்கள் சந்திப்பில், 'நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளோம்' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தெரிவித்தார்.