ADDED : நவ 30, 2024 03:06 AM

வயநாடு: வயநாடு லோக்சபா எம்.பி.யாக பிரியங்கா இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
காங்கிரஸ்
முன்னாள் தலைவர் ராகுல், கடந்த ஏப்.,ல் நடந்த லோக்சபா தேர்தலில்,
கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்
போட்டியிட்டார்.
இரண்டிலும் வென்ற அவர், வயநாடு எம்.பி., பதவியை
ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில்,
அவரது சகோதரி பிரியங்கா போட்டியிட்டார். இதில் பிரியங்காவுக்கு, 6,22,338
ஓட்டுகள் கிடைத்தன.
முதன்முறையாக லோக்சபா எம்.பி.யாக தேர்வு பெற்றார்
நேற்று முன்தினம் சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் அரசியலமைப்பு சட்ட
புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பதவி உறுதி ஏற்பு மொழிஏற்றார்.
இதையடுத்து இன்று வயநாடு வருகிறார். தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

