ADDED : அக் 21, 2024 10:47 PM

புதுடில்லி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ள காங்., கட்சியின் பிரியங்கா நாளை (அக்.23-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளதால், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு நவ.13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ராகுல், தங்கை பிரியங்கா போட்டியிடுகிறார். வரும் நாளை (அக்.23-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார் பிரியங்கா. அதனடிப்படையில் முதன்முறையாக வயநாடு லோக்சபா தொகுதியில் காங்.,வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார்.