UPDATED : மே 10, 2024 06:55 PM
ADDED : மே 10, 2024 06:50 PM

அமிர்தசரஸ்: அசாம் சிறையில் உள்ள ‛பஞ்சாப் வாரியர்ஸ் அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாப் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பஞ்சாப் வாரியர்ஸ் என்ற அமைப்பை துவக்கி காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்தவர் அம்ரித்பால்சிங், கடந்தாண்டு தன் ஆதரவாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை மீட்பதற்காக பயங்கர ஆயுதங்கள், நவீன துப்பாக்கிகளுடன் போலீ்ஸ் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை மிரட்டி அவரை மீட்டுச்சென்றார். இதனால் பஞ்சாப் முழுதும் பதற்றம் ஏற்பட்டது.
பஞ்சாப் போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின் 2023 ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏழாம் கட்டமாக ஜூன் 01-ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலம் கஹாதூர் ஷாஹிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டி தன் வழக்கறிஞர் மூலமாக வேட்புமனுவில் கையெழுதிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.