தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராகுல் மீதான அவதுாறு வழக்கு விசாரணைக்கு தடை

ராகுல் மீதான அவதுாறு வழக்கு விசாரணைக்கு தடை

ராகுல் மீதான அவதுாறு வழக்கு விசாரணைக்கு தடை

13


ADDED : அக் 14, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : அக் 14, 2026 04:00 AM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அவதுாறு வழக்கில், மஹாராஷ்டிரா விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019ல் ராஜஸ்தானில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் விமர்சித்து பேசினார். இந்த பேச்சு, பிரதமரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எச். ஸ்ரீஸ்ரீமால் என்பவர், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை, கடந்த செப்டம்பர் 8ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மாநில அரசு மற்றும் புகார்தாரருக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us