தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரம்: மன்னிப்பு கேட்பதில் சிக்கல் என்கிறார் மத்திய இணை அமைச்சர்
தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரம்: மன்னிப்பு கேட்பதில் சிக்கல் என்கிறார் மத்திய இணை அமைச்சர்
ADDED : ஆக 16, 2024 07:00 PM

சென்னை : தமிழர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக பா.ஜ., மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருக்கும் ராமேஸ்வரம் கபேயில் வெடி குண்டு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்கு காரணமானவர் தமிழகத்தை சேர்ந்தவர் என பா.ஜ., அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறி இருந்தார். இது தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மேலும் நேரிடையாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் மத்திய அமைச்சர் மன்னிப்பு கோரியிருந்தார்.
இதனிடையே ஷோபா தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:தமிழர்களுக்கு எதிராக கூறிய கருத்து விவகாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளது . ஏற்கனவே எக்ஸ் சமூக வலைதளம் மூலம் மத்திய அமைச்சர் மன்னிப்பு கோரியிருப்பதாக அவரது சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கு வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.