sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஜனநாயகன்' வெளியிடுவதில் சிக்கல்; 15ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

/

'ஜனநாயகன்' வெளியிடுவதில் சிக்கல்; 15ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

'ஜனநாயகன்' வெளியிடுவதில் சிக்கல்; 15ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

'ஜனநாயகன்' வெளியிடுவதில் சிக்கல்; 15ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

5


ADDED : ஜன 14, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:48 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- டில்லி சிறப்பு நிருபர் -

விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன் . ஜனவரி, 9ல் திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததை அடுத்து, படத்தின் வெளியீடு நின்றது. இதையடுத்து, திரைப்படத்தை தயாரித்த கே.வி.என்., நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா தலைமையிலான அமர்வு, தணிக்கை வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில், யு/ஏ சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து, விசாரணையை வரும், 21க்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us