sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

" அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

/

" அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

" அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

" அந்த " முயற்சியில் ஈடுபட்ட 28 பேர்: கேரள நடிகை சர்மிளா புது குண்டு

13


UPDATED : செப் 01, 2024 01:09 PM

ADDED : செப் 01, 2024 11:57 AM

Google News

UPDATED : செப் 01, 2024 01:09 PM ADDED : செப் 01, 2024 11:57 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: தன்னை இது வரை பலர் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தப்பித்து ஓடியதாகவும் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை சர்மிளா புது குண்டை போட்டுள்ளார். இது வரை 28 பேர் ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பலாத்காரம் பிரச்னைகளால் பெரும் சிரமத்திற்குள்ளதானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மல்லுவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கலங்கி நிற்கின்றனர். பல புகார் தொடர்பாக சில வழக்குகளும் பதியப்பட்டு விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.



இந்நிலையில் சென்னையை சேர்ந்த கேரளாவில் பல மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் சர்மிளா என்ற நடிகை பழைய சம்பவத்தை புது குண்டாக தூக்கி போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: 1997 ல் அர்ஜூனாவும் அஞ்சு புள்ளைகளும் என்ற திரைப்படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதற்கென அமைத்திருந்த ஒரு செட்டில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது இப்பட தயாரிப்பாளர் எம்.பி.மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை சூழ்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உதவியால் தப்பினேன்.

ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது மோகனன் மற்றும் அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்ய வந்தனர். ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். ' நோ ' என்று கதறியபடி வெளியே ஓடினேன். ஒரு ஆட்டோ டிரைவர் உதவியால் தப்பி வீட்டிற்கு சென்றேன். நான் தப்பித்து விட்டேன் ஆனால் ஏழை நடிகைகள் பலர் இது போன்ற தொல்லையில் இருந்து தப்புவது பெரும் சிரமம். வெளியே சொன்னால் அவமானம், எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு வரும் என்று அப்போது சொல்லவில்லை.

அந்த ' அட்ஜஸ்மென்ட் '


இது போல் மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது பரினயம் என்ற திரைப்பட ஷூட்டிங்கின் போது இயக்குநர் ஹரிஹரன், நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் சர்மிளா அந்த ' அட்ஜஸ்மென்ட் ' பண்ணுவாரான்னு கேட்டார். நான் நோ சொன்னேன். உடனே படபிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். பெண்கள் பணியாற்ற முடியாத நிலை கேரள திரையுலகில் உள்ளது .

இது போல் 28பேர் வரை ' அந்த ' முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நடிகை சர்மிளா கூறியுள்ளார். இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணையை துவக்குவார்கள் என தெரிகிறது. நாள்தோறும் ஒரு நடிகை பாலியல் புகாரால் கேரள திரையுலம் திகைத்து நிற்கிறது.






      Dinamalar
      Follow us