ADDED : மார் 25, 2026 02:13 AM
தொழில் அமைப்புகள் கருத்து
டில்லி மாநில அரசின் வளர்ச்சியை நோக்கிய வரவு - செலவு கணக்கை வரவேற்றுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் அமைப்புகள், சந்தையை உயர்த்துவது அல்லது டில்லியை மேம்படுத்துவது குறித்த உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிதின்குப்தா, தலைவர், கமலா நகர் வர்த்தகர்கள் சங்கம்: டில்லியை எப்படி மேம்படுத்தப் போகிறார் அல்லது டில்லியை எப்படி மாற்றப் போகிறார் என்பதை முதல்வர் விளக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. டில்லி வியாபாரிகள் கல்யாண் வாரியம் அமைக்கப்படும் என்றார் முதல்வர். அது தொடர்பாக, எந்த தகவலும் பட்ஜெட்டில் இல்லை. அதுபோல, பெண்களுக்கான வசதிகள் எப்படி மேம்படுத்தப் போகிறார்கள் என்பதற்கு எதையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
சஞ்சீவ் மெஹ்ரா, தலைவர், கான் மார்க்கெட் வர்த்தகர்கள் சங்கம்: வர்த்தகர்கள் நல வாரியத்தை மேம்படுத்த வேண்டிய சரியான நேரமிது. இதை முதல்வர் செய்வார் என எதிர்பார்க்கிறோம்.
பிரிஜேஷ் கோயல், சி.டி.ஐ., தலைவர்: சாலைகள், கழிவு நீரோடைகள், உள்கட்டமைப்பு போன்ற வசதிகள், எப்படி அமைக்கப்பட உள்ளன என்பது குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அனைத்து தொழில் வளாகங்களுக்கும் ஒதுக்கீடு நடுநிலையாக உள்ளது.
