தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கணவர் கொலையில் சாதுர்யமாக வாதாடிய பேராசிரியைக்கு 'ஆயுள்'

கணவர் கொலையில் சாதுர்யமாக வாதாடிய பேராசிரியைக்கு 'ஆயுள்'

கணவர் கொலையில் சாதுர்யமாக வாதாடிய பேராசிரியைக்கு 'ஆயுள்'


ADDED : ஜூலை 31, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போபால்:மத்திய பிரதேசத்தில், கணவரின் மரணம் குறித்து நீதிமன்றத்தில் அறிவியல்பூர்வமாக வாதாடிய வேதியியல் பேராசிரியைக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் வசித்து வருபவர் மம்தா பதக்; வேதியியல் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நீரஜ் பதக்; ஓய்வு பெற்ற அரசு டாக்டர்.

கணவன் - மனைவி இடையே நீண்ட காலமாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் 2021ல் நீரஜ் பதக் மர்மமான முறையில் தன் வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்ததாக கருதி போலீசார் விசாரித்து வந்தனர்.

சந்தேகம்

ஆனால், தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள், டாக்டர் நீரஜின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.

இதனால், மனைவி மம்தா மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் வேறு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மம்தாவுக்கு 2022ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் தான் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மம்தா மேல்முறையீடு செய்தார். குறைந்தபட்ச சட்ட ஆதரவுடன், வழக்கை தானே வாதாடவும் அவர் முடிவு செய்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் மம்தா வாதாடினார். 'தீப்புண்ணும், மின்சார தாக்குதலால் ஏற்படும் புண்ணும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

' இரண்டுக்கும் இருக்கும் வேறுபாட்டை ரசாயன ஆய்வுகள் மூலமே உறுதிப்படுத்த முடியும்' என, அவர் முன்வைத்த வாதத்தை கேட்டு, ஒட்டுமொத்த நீதிமன்றமும் வாயடைத்தது.

ஒரு சில நொடி அமைதிக்குப் பின் பேசிய நீதிபதி, மம்தாவை பார்த்து, 'நீங்கள் வேதியியல் பேராசிரியரா?' என கேள்வி கேட்க, அதற்கு அவர் 'ஆம்' என ஒற்றை சொல்லில் பதிலளித்தார்.

ஆதரவு

நீதிமன்றத்தில் அறிவியல் பூர்வமாக மம்தா வைத்த வாதம், அதனால் அங்கு ஏற்பட்ட அழுத்தமான சூழல் என மொத்த காட்சிகளையும் ஊடகங்கள் பதிவு செய்தன. இதனால் மம்தாவுக்கு ஆதரவு பெருகியது.

மறுபுறம் வழக்கறிஞர் இல்லாமல், தானே வாதாடியதால் மம்தாவின் தன்னம்பிக்கையும் வளர்ந்திருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் இந்த உணர்வுபூர்வமான விஷயங்கள் எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

அரசு தரப்பு வாதங்கள், மருத்துவ அறிக்கைகள், மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து, நடந்தது கொலை தான் என தீர்ப்பளித்தது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், மம்தாவின் ஜாமினையும் ரத்து செய்து உடனடியாக போலீசில் சரணடைய உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us