ADDED : மார் 12, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானா பல்கலை வளாகத்தில், தன் 8 வயது மகளுடன் இறந்து கிடந்த கல்லுாரி ஆசிரியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ஹிசார் நகரில் அமைந்துஉள்ளது லாலா லஜபதி ராய் கால்நடை அறிவியல் பல்கலை. இங்கு பேராசிரியராக பணிபுரிந்தவர் சந்தீப் கோயல், 35. குடும்பத்துடன் பல்கலை வளாகத்திலேயே இருந்த குடியிருப்பில் வசித்தார்.
கோயல் மற்றும் அவரது 8 வயது மகள் ஆகிய இருவரும் பல்கலை வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இருவருக்கும் கழுத்து அறுக்கப்பட்ட காயம் இருந்தது.
மன அழுத்தப் பிரச்னைக்காக கோயல் சிகிச்சை பெற்று வந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருவரது மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

