sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் லாபம்!

/

8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் லாபம்!

8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் லாபம்!

8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் லாபம்!


ADDED : ஜன 26, 2025 02:49 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை அருகே, சம்பந்தனுார் கிராமத்தில், 8 ஏக்கரில் பண்ணை நடத்தி வரும், மாற்றுத்திறனாளியான ஏழுமலை:

எனக்கு சிறு வயது முதலே ஒரு கால் நடக்க வராது. ஆனால், இதை ஒரு பெரிய குறையாக நினைத்து வீட்டில் முடங்கியது கிடையாது. தமிழக நெடுஞ்சாலை துறை ஊழியராக, 38 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வுபெற்று விட்டேன். பொருளாதார ரீதியாக எந்தவொரு சிரமமும் இல்லை.

இயற்கையுடன் இயைந்த தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த பண்ணையை நடத்தி வருகிறேன்.

இங்கு, 4 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் நிலக்கடலை, எள், 1 ஏக்கரில் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் சாகுபடி செய்கிறேன்.

மீதி 1 ஏக்கரில் தென்னை, பலா, கொய்யா, சப்போட்டா, பெருநெல்லி, வாழை உள்ளிட்ட பயிர்களும் இருக்கின்றன. இவற்றில் ஊடுபயிராக, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், 15 சென்ட் பரப்பில் சாகுபடி செய்கிறேன்.

மாடு, ஆட்டு கொட்டகை, கோழி, செக்கு ஆலை உள்ளிட்டவையும் இங்கு அமைந்திருக்கின்றன. 4 ஏக்கரில் ஆண்டுக்கு, 3 போகம் உயர் விளைச்சல் நெல் ரகங்கள் சாகுபடி செய்கிறேன். ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு தலா, 75 கிலோ எடையுள்ள, 30 முதல் 35 மூட்டை மகசூல் கிடைக்கிறது.

எங்கள் தேவைக்கு போக, மீதி நெல்லை விற்பனை செய்கிறேன். எல்லா செலவுகளும் போக, 1 ஏக்கருக்கு ஆண்டுக்கு, 20,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. 4 ஏக்கரில் 3 போகம் நெல் சாகுபடி செய்வதன் வாயிலாக, 2.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

கார்த்திகை, சித்திரை என இரண்டு பட்டத்தில், 2 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்கிறேன்; செக்கில் எண்ணெய் ஆட்டுகிறேன். ஒரு மாதத்துக்கு சராசரியாக, 100 லிட்டர் கடலை எண்ணெய் விற்பனை வாயிலாக 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

என் தோட்டத்து எள் மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளிடம் இருந்தும் எள் கொள்முதல் செய்து எண்ணெய் ஆட்டுகிறேன். ஒரு மாதத்துக்கு, 60 லிட்டர் நல்லெண்ணெய் விற்பனை வாயிலாக, 21,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

இங்கு மொத்தம், 60 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு மாதத்துக்கு, 30 லிட்டர் தேங்காய் எண்ணெய் விற்பனை வாயிலாக, 6,000 ரூபாய் கிடைக்கிறது. எண்ணெய் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு 5.64 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

என்னிடம் 15 மாடுகளும், 10 கன்றுக்குட்டிகளும் உள்ளன. இவை வாயிலாக ஆண்டுக்கு 25,550 லிட்டர் பால் விற்பனை மூலம், 8.17 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா வகையிலும் மொத்தமாக, ஆண்டுக்கு 16.21 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இவற்றில் எல்லா செலவுகளும் போக, 11 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு:

94433 49294.






      Dinamalar
      Follow us