ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி
ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி
ADDED : ஆக 20, 2025 04:11 PM

புதுடில்லி: ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார், மேற்குவங்கத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 22ம் தேதி பீஹார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11மணிக்கு பீஹாரில் உள்ள கயாவில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.இரண்டு ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பிறகு, கங்கை நதியின் மீது அன்டா - சிமாரியா பாலத் திட்டத்தைப் பார்வையிட்டுத் தொடங்கி வைக்க உள்ளார்.
கோல்கட்டாவில் புதிதாகக் கட்டப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகளை மாலை 4:15 மணியளவில் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். மேலும் ஜெசோர் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து ஜெய் ஹிந்த் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொள்வார். மேலும், கோல்கட்டாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.