தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டி-20 உலக கோப்பை: சர்ச்சையில் 'சூப்பர்-8' சுற்று; ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு

டி-20 உலக கோப்பை: சர்ச்சையில் 'சூப்பர்-8' சுற்று; ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு

டி-20 உலக கோப்பை: சர்ச்சையில் 'சூப்பர்-8' சுற்று; ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு


UPDATED : பிப் 21, 2026 05:42 AM

ADDED : பிப் 21, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2026 05:42 AM ADDED : பிப் 21, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் 20 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெற்ற அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறின. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக முடிவு



ஆனால் இத்தொடர் துவங்கும் முன், 'டாப்-8' அணிகள் தரவரிசைக்கு ஏற்ப, அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அந்த அணிகள் 'சூப்பர்-8'ல் எந்த பிரிவில் இடம் பெறும் என்பதை, ஐ.சி.சி., முடிவு செய்தது.

இதன் படி, இந்தியா X1, ஆஸ்திரேலியா X2, வெஸ்ட் இண்டீஸ் X3, தென் ஆப்ரிக்கா X4 என அந்தஸ்து தரப்பட்டது. இதையடுத்து லீக் சுற்றின் முடிவு எப்படி இருப்பினும் (முதல் அல்லது 2வது இடம் பெற்றாலும்), இந்த 4 அணியும் 'குரூப் 1' ல் இடம் பெறும் என முடிவு செய்யப்பட்டது. திடீர் திருப்பமாக, ஆஸ்திரேலியா வெளியேற, அந்த இடம், ஜிம்பாப்வேக்கு கிடைத்தது.

இதனால், லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற போதும், 'சூப்பர்-8' சுற்றில் சறுக்கும் பட்சத்தில் இரண்டு அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழப்பது, முன்னதாக ஐ.சி.சி., உறுதி செய்கிறது.

பொதுவாக லீக் சுற்றில் சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு சாதகமாக இருப்பதற்குப் பதில், இங்கு, தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தோற்ற போதும்



மறுபக்கம், லீக் சுற்றில் 4 போட்டியில் தலா 1ல் தோற்று, இரண்டாவது இடம் பெற்ற இங்கிலாந்து (Y1), நியூசிலாந்து (Y2), பாகிஸ்தான் (Y3), இலங்கை (Y4) என 4 அணிகள், 'குரூப் 2' ல் இடம் பெற்றுள்ளன.

இதன் படி, லீக் சுற்றில் ஒரு போட்டியில் தோற்ற போதும், 2 அணிகளுக்கு எப்படியும் அரையிறுதி வாய்ப்பு உறுதி என்ற நிலை 'குரூப்-2'ல் காணப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us