தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி

15


ADDED : அக் 12, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

15

ADDED : அக் 12, 2026 01:51 AM


15
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என, கரப்பான்பூச்சி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கரப்பான்பூச்சி கட்சியின் நிர்வாகிகள் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:

போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எங்களுடைய போராட்டம் டில்லியில் மட்டுமல்ல, நாடு முழுதும் விரிவடைந்துள்ளது.

அரசின் நெருக்கடிகளுக்கு அஞ்ச மாட்டோம். போராட்டம் நடத்த மாட்டோம் என்று நாங்கள் எந்த பத்திரத்திலும் கையெழுத்து போட்டுத் தரவில்லை. எங்களுடைய போராட்டம் தற்போதுதான் துவங்கியுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரவேற்க ஆளில்லை


டில்லி போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி கரப்பான்பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, அவரது சக கூட்டாளிகளான சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோரை தடுப்புக் காவலில் இருந்து விடுவித்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த மூவரையும் அழைத்துச் செல்ல அவரது ஆதரவாளர்களோ, தொண்டர்களோ யாருமே வரவில்லை. மூவரும் தனியாகவே காரில் ஏறி புறப்பட்டனர்.

எப்.ஐ.ஆர்., பதிவு


டில்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அனுமதி மீறி ஒன்றுகூடியது தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு

'

கடத்தப்பட்டேன்'
கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க ஜெர்மனியில் இருந்து வந்திருந்த யூ டியூபர் துருவ் ரதியை, ஹரியானாவின் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் நேற்று முன்தினம் காலை தடுப்பு காவலில் கைது செய்தனர். பின்னர், இரவு அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட துருவ் ரதி, 'என்னை தடுப்புக் காவலில் கைது செய்யவில்லை. கடத்திச் செல்லப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்டேன்' என, குறிப்பிட்டுள்ளார்


.

மீண்டும் ரயில்கள் இயங்கின
கரப்பான்பூச்சி கட்சி, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததால், டில்லியில் நேற்று முன்தினம் மெட்ரோ உட்பட பிற ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் தடுப்பு காவலில் கைதாகி விடுதலையான நிலையில், நேற்று இயல்பு நிலை திரும்பியதால், மீண்டும் ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கின.


பாட்டியின் இறுதி சடங்கில் தீப்கே
மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தின் சந்துக் பிம்பரி கிராமத்தில், அபிஜித் தீப்கேவின் பாட்டி சாவித்ரி பாய் சங்கர்ராவ் தீப்கே, 85, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதும், பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர் டில்லியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். செய்துள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us