பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது; அறிவித்தது இஸ்ரோ
பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது; அறிவித்தது இஸ்ரோ
UPDATED : டிச 22, 2024 08:37 AM
ADDED : டிச 22, 2024 08:33 AM

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.
இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும்,
விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை அவசியம். தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணையச் செய்வதற்காக இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த நான்காம் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.
ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.