sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

/

விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்

5


UPDATED : ஜன 01, 2024 11:57 AM

ADDED : ஜன 01, 2024 09:19 AM

Google News

UPDATED : ஜன 01, 2024 11:57 AM ADDED : ஜன 01, 2024 09:19 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோ தலைவர் பாராட்டு !


செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, எக்ஸ்போசாட் தனது ஆய்வு பணியை துவக்கியது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நன்றியும் ,பாராட்டும் அவர் தெரிவித்தார்.

Image 1214283

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள், இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

Image 1214284

ஸ்போசாட் செயற்கைக்கோளில், 'எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்' போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.

Image 1214285

இந்த செயற்கைக்கோள், வானியலின் இயக்கம், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, துாசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.

Image 1214286

Image 1214287

இந்தாண்டு முதலாவதாக ஏவப்படும், பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில் 60வது ராக்கெட். இதன் உயரம் 44.4 மீட்டர். இந்த ராக்கெட், எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம் 260 டன் எடை கொண்டது.






      Dinamalar
      Follow us