தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று விண்ணில் பாய தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்; இஸ்ரோ அறிவிப்பு

இன்று விண்ணில் பாய தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்; இஸ்ரோ அறிவிப்பு

இன்று விண்ணில் பாய தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்; இஸ்ரோ அறிவிப்பு


UPDATED : மே 18, 2025 05:35 AM

ADDED : மே 17, 2025 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2025 05:35 AM ADDED : மே 17, 2025 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட் தயாராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ நாளை தன்னுடைய 101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 22 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். நேற்று( மே 17) மாலை 5.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-61 ராக்கெட் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன், விண்ணில் பாய தயாராக இருக்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us