தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டிசம்பர் 4ல்., விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!

டிசம்பர் 4ல்., விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!

டிசம்பர் 4ல்., விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!


UPDATED : நவ 28, 2024 05:47 PM

ADDED : நவ 28, 2024 01:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2024 05:47 PM ADDED : நவ 28, 2024 01:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.,4ல் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கும் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது.

அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை டிச.,4ல் விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

மொத்தம் 1800 கிலோ எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர், இன்று 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us