பொது தேர்வுகள் முறைகேடு: தடுப்பு மசோதா நிறைவேறியது
பொது தேர்வுகள் முறைகேடு: தடுப்பு மசோதா நிறைவேறியது
UPDATED : ஜூலை 30, 2026 10:27 PM
ADDED : ஜூலை 30, 2026 10:10 PM
தேசிய அளவிலான அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் கடும் அளிக்கிடையே நேற்று நிறைவேறியது.
மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா - 2026, தாக்கல் செய்து கூறியதாவது:
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடிக்கும் வகையில், அமர்வு நீதிமன்றங்களை, சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக அறிவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடும் தனி நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கூட்டாக செயல்படும் கும்பல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபாவில் நேற்று முன்தினம் நிறைவேறிய இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
