ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று பொது விடுமுறை: உ.பி. அரசு அறிவிப்பு
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று பொது விடுமுறை: உ.பி. அரசு அறிவிப்பு
UPDATED : ஜன 09, 2024 07:55 PM
ADDED : ஜன 09, 2024 07:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜன.22-ம் தேதி பொது விடுமுறை நாளாக உ.பி.அரசு அறிவித்துள்ளது.
உபி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் 22-ம் தேதி திறக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாடு முழுதும் வி.ஐ.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி உ.பி. அரசு ஜன.22-ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது. இது தெடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷே கத்தையொட்டி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , வர்த்தக நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.