sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்; தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு

/

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்; தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்; தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்; தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு


UPDATED : பிப் 16, 2026 05:25 PM

ADDED : பிப் 16, 2026 04:37 PM

Google News

UPDATED : பிப் 16, 2026 05:25 PM ADDED : பிப் 16, 2026 04:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜயின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.

தவெக கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், சட்டசபை தேர்தல்களத்தில் இறங்கி உள்ளார். தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகளை துவங்கி உள்ள அவர், தம்மிடம் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக அறிவித்துள்ளார். ஆனால் இப்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கான சமிக்ஞையை தரவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து, பல்வேறு பகுதிகளில் மாநாட்டில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சின்னத்தால் குஷியான தவெக தொண்டர்கள், அனிச்சையாகவே விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி வருகின்றனர்.

இந் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாம் போட்டியிடும் கன்னி தேர்தலிலே தவெகவுக்கு பொது சின்னமான விசில் கிடைத்து, அதிலே களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அடங்கிய 30 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us