திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ராமருக்கு பூஜை
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ராமருக்கு பூஜை
ADDED : ஜன 23, 2024 05:53 AM

தாவணகெரே: திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி, ராமருக்கு பூஜை செய்தனர்.
அயோத்தி ராமர் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினத்தை, சுபகாரியங்கள் செய்யும் நாளாக, ஹிந்துக்கள் மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில், தாவணகெரேயை சேர்ந்த ரோகித், அர்பிதாவுக்கு, தாவணகெரே டவுனில் உள்ள, பாபுஜி திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த, ராமர் பேனருக்கு சிறப்பு பூஜை செய்தனர். அவர்களுடன் சேர்ந்து குடும்பத்தினர், திருமணத்திற்கு வந்த உறவினர்களும், ராமருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து புதுமண தம்பதி கூறுகையில், 'எங்கள் திருமணம் வேறு ஒரு நாளில் நடக்க இருந்தது. ஆனால் இருவீட்டிலும் பேசி, ஜனவரி 22ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்தோம். அயோத்தியில் ராமர் கோவில் திறந்த அன்று, திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ராமரின் பேனருக்கு பூஜை செய்து உள்ளோம். அவரது ஆசி எங்களுக்கு கிடைக்கும் என்று, நம்பிக்கை உள்ளது' என்றனர்.

