
....புல் அவுட்....
*எதிரொலி
கருத்து கணிப்புகள் தலை கீழாகும் என, நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இரண்டு முறை முதல்வராக இருந்த குமாரசாமி, பதவி ஆசையால், சென்னப்பட்டணா தொகுதியை கைவிட்டதால், மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். மூன்று தொகுதியில் காங்கிரசின் வெற்றிக்கு, எங்கள் அரசு செய்த வளர்ச்சி மற்றும் வாக்குறுதி திட்டங்களே காரணம். இந்த முடிவு 2028ன் சட்டசபை தேர்தலின் எதிரொலியாகும்.
- டி.கே.சிவகுமார், துணை முதல்வர்
===========
....புல் அவுட்....
*விமர்சனம் பாதிப்பில்லை
மத்திய அமைச்சர் குமாரசாமியை பற்றி, பொது இடத்தில் நான் அது போன்று விமர்சித்திருக்க கூடாது என, எனக்கும் தோன்றியது. இது குறித்து நான் வருத்தம் தெரிவித்தேன். மக்கள் நான் பேசியதை பொருட்படுத்தவில்லை என, தோன்றுகிறது. என் பேச்சு கட்சிக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை, மூன்று தொகுதிகளில் எங்கள் கட்சியின் வெற்றி உணர்த்துகிறது.
- ஜமீர் அகமது கான், அமைச்சர்
========
.....புல் அவுட்....
*பொய்த்த கணிப்பு
சென்னப்பட்டணா தொகுதி வளர்ச்சிக்கு, யோகேஸ்வர் அதிகம் உழைத்துள்ளார். தொகுதியில் துணை முதல்வர் சிவகுமாருடன், இரண்டு வாரம் நானும் பணியாற்றினேன். கருத்து கணிப்புகள் பொய்த்து போயின. அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இது பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை, இந்த வெற்றி உறுதிப்படுத்துகிறது. முதல்வர் அஹிந்த தலைவர். துணை முதல்வர் ஒக்கலிகர் தலைவர்.
- பிரதீப் ஈஸ்வர், எம்.எல்.ஏ., - காங்.,
========
....புல் அவுட்....
*கட்சிக்கு தோல்வி
இடைத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து, தலைவர்களுடன் ஆலோசிப்போம். சண்டூரில் இப்போதே முதன் முறையாக 80,000 ஓட்டுகள் பெற்றுள்ளது. 8,000 முதல் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். சண்டூரில் நாங்கள் தோற்றதாக கருதவில்லை. பசவராஜ் பொம்மை பல பணிகளை செய்துள்ளார். ஆனால் கட்சி தோற்றுள்ளது. இது பற்றி தன்னாய்வு செய்வோம்.
- பி.ஒய்.விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,
=========
....புல் அவுட்....
*பண விளையாட்டு
இது முதல்வர், துணை முதல்வரின் வெற்றி அல்ல. பணத்துக்கு கிடைத்த வெற்றி. நிகில் குமாரசாமி, அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரை தொகுதி மக்கள், அபிமன்யுவாகவே ஆக்கிவிட்டனர். இரண்டு முறை தோற்ற இவர், மூன்றாவது முறை வெற்றி பெறுவார் என, நினைத்தோம். ஆனால் காங்கிரஸ், பணத்தை கொட்டி அவரை தோற்கடித்தது.
- ஆர்.அசோக், எதிர்க்கட்சி தலைவர்
=========
....புல் அவுட்...
*தோல்விக்கு காரணம்
மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., தோற்கும் என, நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தோல்விக்கு தந்தையும், அவரது இளைய மகனும் காரணம். கட்சி மேலிடம் இனியாவது, தகுதியானவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கட்டும். எடியூரப்பாவுக்கும், விஜயேந்திராவுக்கும் தகவல் தொடர்பாளராக அருண்சிங் செயல்பட்டதே, இந்த தோல்விக்கு காரணம். மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை, மக்கள் அரசியல் ரீதியில் முடித்துவிட்டனர். அங்கு பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
- பசனகவுடா பாட்டீல் எத்னால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,

