அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
ADDED : அக் 28, 2025 08:22 AM

புனே: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக புனே வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்.,9ம் தேதி பல்வேறு இடங்களில் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக புனேவில் உள்ள கோந்த்வா பகுதியைச் சேர்ந்த ஜூபைர் ஹங்கர்கேகர்,35, என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜூபைரின் லேப் டாப் உள்பட மொத்தம் 19 லேப் டாப்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
அதனை ஆய்வு செய்து பார்த்த போது, ஜூபைர் ஹங்கர்கேகரின் லேப் டாப்பில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூபைர் ஹங்கர்கேகரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும், அவரை நவ.,4ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதேபோல, சென்னையில் இருந்து புனே ரயில் நிலையம் வந்திறங்கிய ஜூபைரின் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

