விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு
ADDED : பிப் 13, 2024 01:01 PM

சண்டிகர்: ‛‛ விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது '' என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் சந்தேகம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு தூண்டி விடுவதாகவும் கூறியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி முற்றுகை போராட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். இதனால், டில்லி எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் கூறியதாவது: விவசாயிகளுக்காக பா.ஜ., அரசு செய்த பணிகளை, அதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்தது கிடையாது. நாங்கள் விவசாயிகளுக்கு ஆரவாக தான் உள்ளோம்.
இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது. பொருளாதார ரீதியாக விவசாயிகள் பலம் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். விவசாயிகள் திருப்தி உடன் தான் உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களே அனைத்திற்கும் காரணம்.
இந்த அரசை விட சிறந்த அரசு வேறு இல்லை என சாமானிய விவசாயிகள் புகழாரம் சூட்டுகின்றனர். பஞ்சாப் அரசு போராட்டத்தை தூண்டி விடுகிறது. வன்முறையை தூண்டுகின்றனர். போராட்டத்தின் பின்னணியில் அம்மாநில அரசு உள்ளதால், வன்முறை பெரிதாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.