UPDATED : ஆக 14, 2011 07:13 PM
ADDED : ஆக 14, 2011 07:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை தொடர்பாக ஆந்திரா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஆரக்ஷான் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த படம் குறித்து ஆராய பஞ்சாப் மாநில அரசு 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளை நீக்க பரிந்துரை செய்தது. இதனையடுத்து படத்தின் இயக்குநர் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினார். இதன் பின்னர் குழு குறிப்பிட்ட காட்சிகள் நீக்கியதை, படத்தை பார்த்து உறுதி செய்த குழுவினர், படத்தை வெளியிட அனுமதி அளித்தனர்.