தள்ளு... தள்ளு....தள்ளு.... ரயிலை கைகளால் தள்ளிய ரயில்வே ஊழியர்கள்
தள்ளு... தள்ளு....தள்ளு.... ரயிலை கைகளால் தள்ளிய ரயில்வே ஊழியர்கள்
UPDATED : மார் 22, 2024 10:50 PM
ADDED : மார் 22, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமேதி: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் என்ஜின் பழுதாகி நடுவழியில் தண்டவாளத்தில் நின்றிருந்த ரயிலை ரயில்வே ஊழியர்கள் கைகளால்தள்ளி சென்ற சம்பவம் உபி.யில் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அமேதியில் நிஹால்கார்க் ரயில் நிலையஅருகே அதிகாரிகளால் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் என்ஜின் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லெவல் கிராசிங்கில் குறுக்கே நின்றுவிட்டது.
மெயின் லைனில் என்ஜின் நின்றுவிட்டதால் அதனை லூப் லைனில் இணைக்க ரயில்வே ஊழியர்கள் கைகளால் தள்ளிச்சென்றனர். ரயிலை கைகளால் தள்ளிச்செல்வதை கிராசிங்கில் நின்று கொண்டிருத் மக்கள் வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

