அஹிம்சை, உண்மையால் உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர் காந்தி; நினைவிடத்தில் புடின் புகழாரம்
அஹிம்சை, உண்மையால் உலகுக்கு பன்முக பாதையை காட்டியவர் காந்தி; நினைவிடத்தில் புடின் புகழாரம்
ADDED : டிச 05, 2025 03:58 PM

புதுடில்லி: நமது பூமியில், அஹிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். நேற்று அவரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.
இன்றைய தினம் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக புடின், காந்தியின் நினைவிடம் சென்றார். அங்கு அவர், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு வைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
அதில் புடின் எழுதிய குறிப்பின் விவரம் வருமாறு;
நமது பூமியில், அஹிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது.
காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார், அது இப்போது உருவாகி வருகிறது.
சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகள் ஆகியவை இன்று பன்னாட்டு அரங்கில் மதிப்புகளை பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறு தான் செய்கிறது.
இவ்வாறு அவர் அந்த குறிப்பேட்டில் எழுதினார். கையெழுத்திட்டு எழுதிய அந்த குறிப்புகள் அனைத்தும் ரஷ்ய மொழியில் தான் இருந்தது, குறிப்பிடத்தக்கது.

