வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்; பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்; பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
ADDED : ஜூலை 24, 2024 04:34 PM

பாட்னா: அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்க, பீஹார் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. வினாத்தாளை கசிய விட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‛‛ ஜார்க்கண்டின் ஹசாரிபாக், பீஹாரின் பாட்னாவில், இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை'' என கூறியிருந்தது.
இந்நிலையில்,அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்க, பீஹார் சட்டசபையில் இன்று (ஜூலை 24) மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. வினாத்தாளை கசிய விட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், தேர்வு முறைகேடுகளுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமின் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், இனி வருங்காலங்களில் பீஹார் மாநிலத்தில் வினாத்தாள் கசிவை தடுக்க உதவும்.