ADDED : ஜூலை 24, 2011 02:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : பார்லிமென்டில் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போடுவதற்காக எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியில் இருந்த அமர் சிங், அவரது உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, இடைத்தரகராக செயல்பட்ட சுகைல் இந்துஸ்தானி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சஞ்சீவ் சக்சேனா, சுகைல் இந்துஸ்தானி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமர்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துளள சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அமர்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது நீதிக்கு எதிரானது என கூறியுள்ளார்.