sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

/

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

7


ADDED : ஜூன் 05, 2025 05:25 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 05:25 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பல்வேறு தாக்குதலுக்கு இக்கட்டான நேரத்தில் கை கொடுத்தது ரபேல் போர் விமானம் என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்று.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களின் தேவை முக்கியமாக மாறிவிட்டது.

சமீபத்தில் கடற்படைக்காக, ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில், ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

உள்நாட்டு, வெளிநாட்டு ஆயுத சந்தைகளுக்காக ஹைதராபாத்தில் உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளது. 2028ம் ஆண்டு முதல் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். போர் விமானங்களின் முன், பின் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பல இக்கட்டான நேரத்தில், கை கொடுத்த ரபேல் போர் விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தான் தற்போது கையெழுத்தாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கு இது ஒரு பெருமையான தருணம். இது இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் வெற்றி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்தியாவிலேயே ரபேல் போர் விமானங்களின் பாகங்களை தயாரிப்பதால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளுக்கு மவுசு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us