sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் தேர்தலிலும் ஓட்டுகளை திருட முயற்சி தேர்தல் கமிஷன் மீது ராகுல் குற்றச்சாட்டு

/

பீஹார் தேர்தலிலும் ஓட்டுகளை திருட முயற்சி தேர்தல் கமிஷன் மீது ராகுல் குற்றச்சாட்டு

பீஹார் தேர்தலிலும் ஓட்டுகளை திருட முயற்சி தேர்தல் கமிஷன் மீது ராகுல் குற்றச்சாட்டு

பீஹார் தேர்தலிலும் ஓட்டுகளை திருட முயற்சி தேர்தல் கமிஷன் மீது ராகுல் குற்றச்சாட்டு


ADDED : ஆக 18, 2025 12:35 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ''பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு வருவதை ஒட்டுமொத்த நாடும் அறிந்துள்ளது. பீஹார் தேர்தலையும் திருடும் முயற்சியாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன” என, காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், பீஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதியில் 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், காங்., - எம்.பி., ராகுல் நேற்று யாத்திரையை துவக்கி வைத்தார்.

இதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த யாத்திரை, 20 மாவட்டங்கள் வழியாக 1,300 கி.மீ., தொலைவு கடந்து, வரும் செப்., 1ல், தலைநகர் பாட்னாவில் முடிவடைய உள்ளது.

முன்னதாக, இந்த யாத்திரையை நேற்று துவக்கி வைத்து ராகுல் பேசியதாவது:

ஓட்டுத் திருட்டு பிரச்னைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்.

பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன் ஓட்டுகள் திருடப்பட்டதை நாடு அறிந்திருக்கவில்லை. ஆனால், ஓட்டுகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை நாங்கள் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாகக் காட்டிவிட்டோம்.

மஹாராஷ்டிரா சட்ட சபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் ஓட்டுகள் திருடப்பட்டன. பீஹார் தேர்தலிலும் ஓட்டுகளைத் திருடும் முயற்சியாக வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடைபெறுகிறது. பீஹார் தேர்தலில் ஓட்டுகளைத் திருட விடமாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us