அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ.,: ராகுல் குற்றச்சாட்டு
அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ.,: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 16, 2024 12:29 PM

வயநாடு: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், மாற்றவும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருவதாக கேரளாவின் வயநாடு தொகுதியில் நடந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, பா.ஜ., சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.
இன்று (ஏப்.,16) வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கோடியத்தூர் பகுதியில் ராகுல் 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்துக்கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திசை திருப்புகிறார்
தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியலமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நரேந்திர மோடி, இந்தியாவின் மிகப்பெரிய 5, 6 பணக்காரர்களின் கருவியாக இருக்கிறார். உண்மையான பிரச்னைகளில் இருந்து இந்திய மக்களை திசை திருப்புவதே அவரது குறிக்கோள்.


