UPDATED : ஆக 01, 2024 05:08 PM
ADDED : ஆக 01, 2024 02:35 PM

வயநாடு: மழை நிலச்சரிவால் பாதித்த கேரளாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் இன்று (ஆக-1) வந்தனர். காலை 9:30 மணிக்கு கண்ணூர் வந்த அவர்கள், சாலை மார்க்கமாக வயநாடு சென்றனர். 290க்கும் மேற்பட்டோர் பலியான மேப்பாடி, முண்டகை, சூரல்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
சூரமலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை பார்த்து ஆறுதல் தெரிவித்து, குறைகளை கேட்டறிந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அவர்களை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைத்துச் சென்றார். இருவரும் ரெயின் கோட் அணிந்து இருந்தனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலங்கள் மற்றும் சேறு சகதிகளில் சிக்காமல் பாதுகாப்புடன் அதிகாரிகள் ராகுல் மற்றும் பிரியங்காவை அழைத்து சென்றனர்.