இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்துவதா? ராகுலுக்கு உ .பி., முதல்வர் கண்டனம்
இந்தியாவின் ஆன்மாவை காயப்படுத்துவதா? ராகுலுக்கு உ .பி., முதல்வர் கண்டனம்
ADDED : ஜூலை 02, 2024 08:30 AM

லக்னோ: ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என எதிர்கட்சி தலைவர் ராகுல் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்றைய லோக்சபாவில் ராகுல் பேசுகையில் பா.ஜ.,வினர் வெறுப்பை பரப்புகின்றனர், இவர்கள் ஹிந்துக்கள் அல்ல என கடுமையாக விமர்சித்தார். இதற்கு சபையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., மூத்த தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:
ராகுல் ஒட்டுமொத்த ஹிந்துக்களையும் அவமதித்துள்ளார். இது ஹிந்துக்களை மட்டும் அல்ல. இந்த பாரத தாயின் ஆன்மாவை காயப்படுத்தி உள்ளார். ஹிந்து மதம் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டது. இவர் கோடிக்கணக்கான ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.